போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சாணி வீச்சு
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷனா சூரியப் பெருமவுக்கு எதிர்ப்புத. தெரிவிக்கும் வகையில், சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட புதிய மக்கள் முன்னணி ஆதரவாளர்கள் குழு ஒன்று இன்று காலை (28) பெலவத்த, அக்குரகொடவில் உள்ள அவரது இல்லத்துக்கு முன் கூடியது.
நிதி அமைச்சின்செயலாளர் ஹர்ஷனா சூரியப்பெருமவின் இல்லத்துக்கு அருகே புதிய மக்கள் முன்னணி குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, சிலர் சுகீஸ்வர பண்டார மற்றும் பலரை சாணத்தால் தாக்கினர்.
அதனைத் தொடர்ந்து, இரு குழுக்களுக்கும் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டது, நிலைமையைத் தணிப்பதற்காக பொலிஸ. வரவழைக்கப்பட்டது.

