வில்பத்து வன அழிப்பு வழக்கு: மேல்முறையீட்டு விசாரணையிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி விலகல்
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

வில்பத்து வனப்பகுதியை ஒட்டியுள்ள காடுகளை அழித்து மீள்குடியேற்றங்களை மேற்கொண்டமைக்காக, குறித்த பகுதிகளை மீண்டும் வனமாக்கும் செலவை முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஏற்க வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் முன்னதாக தீர்ப்பளித்திருந்தது. இந்தத் தீர்ப்பினை சவாலுக்கு உட்படுத்தி ரிஷாத் பதியுதீனால் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னிலையில் இந்த மனு பரிசீலனைக்கு வந்தபோது, அந்த அமர்வின் தலைவராக இருந்த நீதிபதி ஏ. எச். எஸ். டி. நவாஸ், தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த வழக்கிலிருந்து தாம் விலகுவதாக பகிரங்கமாக அறிவித்தார். நீதிபதியின் இந்த முடிவைத் தொடர்ந்து, குறித்த மேல்முறையீட்டு மனுவின் அடுத்த கட்ட விசாரணைகளை முன்னெடுப்பதற்காக புதிய நீதிபதிகள் அமர்வு ஒன்று நியமிக்கப்படவுள்ளதுடன், அதன் பின்னர் வழக்கின் மேலதிக விசாரணைகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

