“நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி அவர்களின் 38வது ஆண்டு நினைவு நாளில் அடையாள உண்ணாவிரதம் – 19/04/2026 (UK)”
தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் செய்தி அறிக்கை

தமிழீழ சுயநிர்ணய அமைப்பினால், ஐக்கிய இராச்சியத்தில் நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி அவர்களின் 38வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அடையாள உண்ணாவிரதப் போராட்டம் மிகுந்த எழுச்சியுடன் லண்டன் நகரில் பிரதமர் அலுவலகமான 10 Downing Street முன்பு, ஞாயிற்றுக்கிழமை 19/04/2026 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற்றது.
இந்நிகழ்வு தமிழீழ தேசியக் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
ஐக்கிய இராச்சியத்தின் தேசியக் கொடியை தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் தலைவர் முனைவர் சொக்கலிங்கம் யோகலிங்கம் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தமிழீழ தேசியக் கொடியை முன்னாள் போராளி முகுந்தன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் செயலாளர் முனைவர் அருணாசலம் ராஜலிங்கம் அவர்கள் பொதுச்சுடரை ஏற்றிவைத்தார்.
நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி அவர்களை நினைவுகூரும் விதமாக, நினைவுச் சுடரை செல்வி வளந்திஜா அவர்கள் ஏற்றிவைத்தார்.
மாலை அணிவிப்பு நிகழ்வில், ஒருங்கிணைப்பாளர்கள் ரஜீத்தா மற்றும் நிந்துயா அவர்கள் அன்னை பூபதி அவர்களின் நினைவுச் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
முதல் மலர் வணக்கத்தையும் விளக்கேற்றத்தையும் ஒருங்கிணைப்பாளர் ரவிகரன் துவாரகன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் மலர் வணக்கம் செலுத்தினர்.
அகவணக்க நிகழ்வில், தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்கள், அப்பாவிகளாக உயிரிழந்த தமிழ் மக்கள், மாமனிதர்கள், நாட்டுப்பற்றாளர்கள் மற்றும் குறிப்பாக அன்னை பூபதி அவர்கள் ஆகியோரின் நினைவாக சிறுதுளி நேரம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமானது.
நிகழ்வின் போது:
அன்னை பூபதி அவர்களைப் பற்றிய தேசப்பற்று பாடல்கள் பாடப்பட்டன,
உரைகள் மற்றும் கவிதைகள் வழங்கப்பட்டன,
100-க்கும் மேற்பட்டோர் அடையாள உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்,
இந்நிகழ்வில் தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் தலைவர் முனைவர் யோகலிங்கம் அவர்களின் உரையும், செயலாளர் முனைவர் ராஜலிங்கம் அவர்களின் உரையும், தேசிய செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களின் உரைகளும் இடம்பெற்றன.
நிகழ்வின் இறுதியில், பங்கேற்ற அனைவருக்கும் பலரசம் வழங்கப்பட்டு, அடையாள உண்ணாவிரதம் நிறைவுற்றது.
பின்னர் கொடி கையேற்பும் மற்றும் உறுதியேற்பும் இடம்பெற்று நிகழ்வு நிறைவடைந்தது.
இந்த நிகழ்வை ராகவன் மற்றும் வளந்திஜா அவர்கள் திறம்பட ஒருங்கிணைத்து நடத்தி வைத்தனர்.
https://photos.app.goo.gl/adiqDkeSkf8LG8aR9
தமிழீழ சுயநிர்ணய அமைப்பு
(UK)
admin@msdte.org
www.msdte.org
“தமிழரின் தலைவிதி தமிழரின் கையில்”
“தமிழரின் தாகம்
தமிழீழத் தாயகம்”

