குருதிக்கொடை முகாமில் இளைஞர்கள்…

Sathees Navaratnam

நேற்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்ற குருதிக்கொடை முகாமில் பல இளைஞர்கள் தமது விரதத்தை நிறைவு செய்த பின்னர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குருதி வழங்கிய செயல் உண்மையில் அனைவரையும் நெகிழ வைத்தது.


நேற்றய குருதிக்கொடை முகாமில் கொடையாளர்களாகிய வேத விநாயகர் ஆலயத்தின் வணக்கத்திற்குரிய குருக்கள் ஐயா, தொண்டர்கள் தாவடி கந்தசுவாமி ஆலயத்தின் வணக்கத்திற்குரிய அந்தணர், தொண்டர்கள், தாவடி வடபத்திரகாளி அம்பாள் ஆலய தொண்டர்கள், தையிட்டி வாழ் நண்பர்கள் தாவடி ஊர்மக்கள் அனைவருக்கும், இவ்விடத்தில் அன்னதான மண்டபத்தை தந்துதவிய தாவடி வேத விநாயகர் ஆலய நிர்வாகத்தினர் மற்றும் முகாமிற்கு தேவையான தளபாடங்களை வழங்கிய தாவடி வேத விநாயகர் விளையாட்டு கழகத்தினருக்கும் மனமார்ந்த நன்றிகளை ஒருங்கமைப்பாளர்கள் தெரிவித்துக் கொண்டார்கள்.