கொழும்பில் வழமைக்குத் திரும்பும் பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்துச் சேவைகள்
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இன்றைய தினம் கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்துச் சேவைகள் எவ்விதத் தடையுமின்றி சீராக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. காலை வேளையில் வீதிகளில் பேருந்துகளின் நடமாட்டம் சற்றே குறைவாகக் காணப்பட்ட போதிலும், நேரம் செல்லச் செல்ல பேருந்துகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாகப் பயணிகள் மற்றும் சாரதிகள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, தற்போது ஒவ்வொரு 10 முதல் 15 நிமிட இடைவெளியில் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதால், பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் தவிர்க்கப்பட்டுள்ளது.

அதேபோல், ரயில் சேவைகளும் தடையின்றி இயங்கி வருகின்றன. பாணந்துறை போன்ற புறநகர்ப் பகுதிகளிலிருந்து கொழும்பு நோக்கிய ரயில் சேவைகள் வழமை போல் இடம்பெறுவதுடன், ரயில் நிலையங்களில் தற்போது பெரியஅளவிலான சனநெரிசலோ அல்லதுபோக்குவரத்துத் தாமதங்களோ காணப்படவில்லை
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தடையற்ற போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக, ஆரம்பத்தில் நிலவிய மந்தகதியான நிலை மாறி, தற்போது கொழும்பின் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன


