ஸ்டாலின், விஜய், சீமான்: டெல்லிக்கு எதிராக ஒன்று திரண்ட தமிழகம்

Meiveli Media Team

 
மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்கு எதிராக தமிழகத்தின் பிரதான அரசியல் தலைவர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டுள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சியின் சீமான் என ஒட்டுமொத்த அரசியல் களமும் -அதிமுக கூட்டணி தவிர்த்து இந்தத் திட்டத்தை மிகக் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். மக்கள் தொகையைக் காரணம் காட்டி தொகுதிகளை மாற்றியமைத்தால், தென்னிந்திய மாநிலங்களின், குறிப்பாக தமிழகத்தின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறையும் என அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள இந்தச் சூழலில், கொள்கை ரீதியாக வேறுபட்டு நின்றாலும் மாநிலத்தின் உரிமைக்காக ஆளுங்கட்சியும் மற்ற எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து குரல் கொடுப்பது ஆரோக்கியமான அரசியலாகப் பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் பலத்தைக் குறைக்க நடக்கும் இந்த ‘சதி’க்கு எதிராகத் தலைவர்கள் ஒன்றிணைந்திருப்பது டெல்லி வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தேர்தல் வியூகத்தைத் தாண்டி, தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்காலத்திற்கான போராட்டமாக உருவெடுத்துள்ளது.