சீனக்குடா விமானப்படை அகடமியின் 65ஆவது ஆண்டு நிறைவு: திருகோணமலை கடற்கரை துப்புரவுப்பணி!

கந்தளாய் யூசுப் - Sri Lanka - Reporter for MEIVELI

 

திருகோணமலை சீனக்குடா விமானப்படை அகடமியின் 65ஆவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு, நேற்று (06) காலை திருகோணமலை பிரதான கடற்கரைப் பகுதியில் பாரிய சிரமதானப் பணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

விமானப்படை அகடமியின் விசேட தினத்தை நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த தூய்மைப்படுத்தும் நடவடிக்கையில், சீனக்குடா விமானப்படை தளத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விமானப்படை வீரர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

விமானப்படையினருடன் இணைந்து கரையோரப் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளும் இந்த பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். இதன்போது கடற்கரையோரத்தில் சிதறிக்கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள், பொலித்தீன் பைகள் மற்றும் ஏனைய திடக்கழிவுகள் அகற்றப்பட்டு கடற்கரை பகுதி அழகுபடுத்தப்பட்டது.

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாகக் காணப்படும் திருகோணமலை கடற்கரைப் பகுதியைப் பாதுகாக்கும் நோக்கோடும், பொதுமக்களிடையே சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த நடவடிக்கை அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது