புசல்லாவ பொலிஸ் பிரிவுக்கு உற்ப்பட்ட வகுப்பிட்டி பிரதேசத்தில் இன்று முச்சக்கரவண்டி விபத்து ஏற்ப்பட்டுள்ளது.
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI
![]()
புசல்லாவ பெரட்டாசி பகுதியில் இருந்து கம்பளை பகுதிக்கு வந்த முச்சக்கரவண்டி வகுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து பள்ளத்தில் புரண்டு உள்ளது.
வாகனத்தின் பிரேக் திடீரென இல்லாமல் போனதால் வாகனம் பள்ளத்தில் புரண்டு விபத்து ஏற்ப்பட்டது.
இதில் பயணித்த சாரதி உற்ப்பட நான்கு பேர் காயங்களுக்கு உள்ளாகி புசல்லாவ வகுப்பிட்டி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலதிக விசாரணை புசல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

