நுவரெலியாவில் கொட்டி தீர்த்த கனமழை.
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

நுவரெலியாவில் இன்று (03) பிற்பகல் வேளையில் ஒரு மணி நேரம் விடாது இடியுடன் மழை கொட்டி தீர்த்தது.
குறிப்பாக நுவரெலியா , நானுஓயா, லிந்துலை, மெரயா ,திஸ்பனை போன்று பகுதிகளில் கடுமையாக பெய்த கனமழையால் பிரதான வீதிகளி மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது மேலும் ஆங்காங்கே மின் தடை ஏற்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இதேவேளை நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லபுகலை தோட்டத்தில் நேற்று (02) ஆம் திகதி வியாழக்கிழமை பெய்த கடும் மழை காரணமாக மரம் ஒன்றின் மீது இடி மின்னல் தாக்கியதன் காரணமாக குறித்த மரம் முறிந்து விழுந்துள்ளது. முறிந்து விழுந்த மரத்தின் கிளை இருவர் மீது சாய்ந்ததன் காரணமாக படுக்காயம் அடைந்த ஆண் மற்றும் பெண் ஆகிய இருவர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின்னர் வீடுத்திரும்பியுள்ளனர்.
நுவரெலியாவில் தொடர்ந்து பல பகுதிகளில் பரவலாக பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது இதனால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் கடந்த நாட்களில் நுவரெலியாவில் அதிக வெப்பமான காலநிலையால் குடிநீர் இன்றி பல்வேறு பாதிப்புக்கள் காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது .

