2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு : 66 வீதமான மாணவர்கள் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி
Meiveli Media Team

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், இம்முறை 66 வீதமான மாணவர்கள் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்றுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். நேற்று இரவு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு 2 81,810 விண்ணப்பதாரர்கள் தோற்றியதுடன், அவர்களில் 176,527 பேர் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்காக விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதேவேளை, 111 விண்ணப்பதாரர்களின் பெறுபேறுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மாகாண ரீதியான பல்கலைக்கழகப் பிரவேசத் தகுதி வீதம்: மேல் மாகாணம்: 69.42வீதம் . வடமேல் மாகாணம்: 68.48வீதமஇ வட மாகாணம்: 66.91வீதமஇ
கிழக்கு மாகாணம்: 66.32வீதமஇ தென் மாகாணம்: 65.69வீதம சப்ரகமுவ மாகாணம்: 64.97வீதம , ஊவா மாகாணம்: 63.53வீதம மத்திய மாகாணம்: 63.04வீதம
வடமத்திய மாகாணம்: 60.91வீதம, என தெரிவிக்கப்படுகின்றது. பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்றவர்களில் பெரும்பாலானோர் மாணவிகளாவர். இருப்பினும், உயிரியல் விஞ்ஞானம் பிரிவில் மாத்திரம் மாணவர்களே அதிகளவில் தகுதி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை கலைப்பிரிவில் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை 32.03வீதம ஆகக் குறைவடைந்துள்ளதுடன், உயிரியல், பௌதீகவியல், தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் மாணவர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளதாக ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். இதன்படி, இம்முறை தேசிய மட்டத்தில் முதலிடங்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்களா, உயிரியல் விஞ்ஞானப் பிரிவு:கொழும்பு றோயல் கல்லூரி கல்லூரி மாணவன் டிலான் சஞ்சன முதலிடத்தைப் பெற்றிருக்கிறார். பௌதீகவியல் -கணித பிரிவில் கிளிநொச்சி மகா வித்தியால மாணவன் தேவேந்தன் திருகுமரன் முதலாம் இடத்தைப் பெற்றிருக்கிறார்.

