பிரித்தானியாவிற்கான விசா கட்டணங்கள் வரும் ஏப்ரல் 8 முதல் உயர்வு
Meiveli Media Team

பிரித்தானியாவிற்குச் செல்லும் பயணிகள், மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான விசா கட்டணங்களைக் கணிசமாக உயர்த்துவதாக அந்நாட்டு உள்துறை அலுவலகம் அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு வரும் ஏப்ரல் 8இ 2026 முதல் அமுலுக்கு வரவுள்ளது. விண்ணப்பதாரர்களின் வகைப்பாட்டிற்கு ஏற்ப கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. பயண விசா: சாதாரண 6 மாத கால பயண விசா கட்டணம் 127 பவுண்டிலிருந்து 135 பவுண்டுகளாக உயர்கிறது. நீண்டகால விசா: 2 வருட விசா கட்டணம் 506 பவுண்டுகளாகவும், 10 வருட விசா கட்டணம் 1,128 பவுண்டுகளாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன. பணியாளர் விசா: 3 ஆண்டுகள் வரையிலான தங்குதலுக்கான விசா கட்டணம் 769 பவுண்டிலிருந்து 819 பவுண்டுகளாக அதிகரிக்கிறது. குடியேற்ற விசா : காலவரையறையற்ற தங்குமிடம் கோரும் விசா கட்டணம் 2,064 பவுண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடியேற்ற நடைமுறைக்கான செலவினங்களை ஈடுகட்டவும், நாட்டில் குடியேறுபவர்களின் எண்ணிக்கையை முறைப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது. எனினும்இ இந்த அறிவிப்பு பல்வேறு தரப்பினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துப் பேசிய பிரித்தானிய தொழில்துறை கூட்டமைப்பு , ‘ஏற்கனவே பு7 நாடுகளில் பிரித்தானியாவே அதிக வேலைவாய்ப்பு விசா கட்டணங்களைக் கொண்டுள்ளது. இந்த கூடுதல் உயர்வு, சர்வதேச அளவில் திறமையான பணியாளர்களை ஈர்ப்பதில் பின்னடைவை ஏற்படுத்தும், என எச்சரித்துள்ளது. கட்டண உயர்வு நடைமுறைக்கு வருவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கூடுதல் செலவைத் தவிர்க்க விண்ணப்பதாரர்கள் மற்றும் நிறுவனங்கள் ஏப்ரல் 8-ஆம் திகதிக்கு முன்னதாகவே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

