தந்தை செல்வாவின் 128 வது ஜனனதினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

தந்தை செல்வா என தமிழர்களால் அழைக்கப்படும் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் அல்லது எஸ். ஜே. வி. செல்வநாயகம் என்பவர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியாக, வழக்கறிஞராக, நீண்ட நாட்களாக பணியாற்றினார்.

இவரது சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வு இன்று வரையும் பல தமிழ் கட்சிகளின் கொள்கைகளாக இருந்து வருகின்றன.

இன்று யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் உருவ சிலைக்கு தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் சட்டத்தரணி
எம். ஏ. சுமந்திரன் தமிழர் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் மாணவர் சபை முதல்வர், கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் மலர் மாலை அணிந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதன் போது தந்தை செல்வநாயகம் தொடர்பாக தமிழரசு கட்சியின் செயலாளர் எம். ஏ. சுமந்திரன் கருத்துக்களை பகிர்ந்தார்.