வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பால் மலையகத்தில் பெரும் அவதிக்குள்ளாகியுள்ள நோயாளர்கள்

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் அடையாள வேலைநிறுத்தம் அதற்கமைய மலையகத்திலும் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.

இதன் காரணமாக (31) இன்றைய தினம் சிகிச்சை பெறுவதற்காக சென்ற நோயாளர்கள் அவதியுற்றள்ளனர்.

எந்தவித ஆலோசனையும் இன்றி, சட்டவிரோதமாகவும் அரசியல் உள்நோக்கத்துடனும் மருத்துவ இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமைக்கு எதிராக இன்று (31) காலை 8 மணி முதல் நாளை (01) காலை 8 மணி வரை வைத்தியர்கள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதன் காரணமாக நோயாளர் விடுதி, விபத்துப்பிரிவு, சத்திர சிகிச்சை பிரிவு உட்பட சில சேவைகளில் மட்டுப்படுத்தப்பட்ட வைத்தியர்கள் சேவையில் ஈடுபடுவதுடன் வெளிநோயாளர் பிரிவு, மாதாந்த பரிசோதனைப் பிரிவு போன்ற ஏனைய சேவைகளிலிருந்து வைத்தியர்கள் முற்றாக விலகி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.

குறிப்பாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவு மகப்பேறு சிகிச்சை பிரிவு சேவைகள் போன்றவை எவ்விதத்திலும் பாதிக்கப்படாதவாறு தொடர்ந்து வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.