தமிழ்நாட்டில் பாஜக வேரூன்றுவதற்கு திமுகதான் முக்கியக் காரணம்: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சீற்றம்
Meiveli Media Team

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாட்டில் பாஜக வேரூன்றுவதற்கு திமுகதான் முக்கியக் காரணம் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.சீமான் கூறுகையில்இ ‘திமுகவும் அதிமுகவும் வெளியிட்டிருப்பது தேர்தல் வாக்குறுதி அல்ல; வெறும் இலவச அறிவிப்புகள் மட்டுமே. வேலை இல்லாதவர்களுக்கு ரூ.4,000 கொடுப்பதாக விஜய் கூறுகிறார். அதற்கு பதிலாக அவர்களுக்கு வேலை கொடுக்க முயற்சி செய்யலாமே? வேலைதான் முக்கியம். இரண்டாயிரம், இரண்டாயிரத்து நூறு, நாலாயிரம் என்று இலவசங்கள் கொடுப்பதாக அறிவிப்பது என்ன வட்டிக்கடை வைத்திருக்கிறீர்களா?’ என்று கேள்வி எழுப்பினார். மேலும் அரசு கல்வியை இலவசமாகக் கொடுக்க வேண்டியது அதன் கடமை. மாணவர்களுக்கு கல்வி உரிமை. அதை விட்டுவிட்டு, பிள்ளைகளைப் படிக்க வைக்க கடன் வாங்கச் சொல்வது என்ன நியாயம்? ஒரு நாட்டின் பிள்ளைகளைப் படிக்க வைப்பது அரசின் கடமை. அதற்கு ஏன் கடன்? மாணவன் கடன் வாங்கி படிக்கும் நிலைக்கு ஏன் தள்ளுகிறீர்கள்?’ என்று கேட்டார். வருபவர்கள், போகிறவர்கள் எல்லாம் என் மக்களை ஏமாற்றி, நாட்டை விற்று ஏலம் போடுகிறார்கள். ஆறு லட்சம் பெண்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் கொடுப்பதாகச் சொல்கிறார்கள். இது ஒரு கேவலம். சாராயக்கடைகளைத் தெருத்தெருவாக வைத்து, மக்களை குடிகாரர்களாக்கி, பின்னர் பாதுகாப்பு இல்லை, சட்டம் ஒழுங்கு இல்லை என்று பேசுவது பைத்தியக்காரத்தனம்’ என்று விமர்சித்தார். இறுதியாக அவர், ‘இந்த ஆட்சியில் மலை, மணல், ஆற்று மணல், வளங்கள் அனைத்தையும் விற்று, நாட்டை அடமானம் வைத்து, பத்தரை லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளனர். இன்னும் இலவச அறிவிப்புகளுக்காகப் பத்து லட்சம் கோடி கடன் வாங்க வேண்டிய நிலை. வரி, வட்டி, சம்பளம், அரசு நிர்வாகம் என அனைத்தும் பாதிக்கப்படும். இந்த நிலைக்கு யார் காரணம்? திமுகதான். அதனால்தான் பாஜகவுக்கு இங்கு இடம் கிடைக்கிறது’ என்று தெரிவித்தார்.

