பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு அமெரிக்காவிற்கு உண்மையான நோக்கம் இல்லை : போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் முன்வைத்த ஐந்து  நிபந்தனைகள்

Meiveli Media Team

மத்திய கிழக்கில் நீடித்துள்ள போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட அமெரிக்காவின் முன்மொழிவுக்கு ஈரான் எதிர்மறையாகப் பதிலளித்துள்ளது. ஈரானின் மூத்த அரசியல் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பிரஸ் டிவிக்கு அளித்த செவ்வியில், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் ஈரானின் நிபந்தனைகள் மற்றும் கால அட்டவணையின்படியே நடக்கும் என வலியுறுத்தினார். அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு அமெரிக்காவிற்கு உண்மையான நோக்கம் இல்லை என்று தெரிவித்தார். பிராந்திய இடைத்தரகர் மூலம் வழங்கப்பட்ட சமீபத்திய அறிக்கையை, பதட்டங்களை அதிகரிப்பதற்கான ஒரு தந்திரம் என தெரிவித்த அவர் போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் ஒப்புக்கொள்ளும் ஐந்து குறிப்பிட்ட நிபந்தனைகளை அந்த அதிகாரி கோடிட்டுக் காட்டினார்.
1. எதிரியின் ‘ஆக்கிரமிப்புகள் மற்றும் படுகொலைகளை’ முழுமையாக நிறுத்துதல்.
2. இஸ்லாமியக் குடியரசுக்கு எதிராக மீண்டும் போர் மூளாமல் இருப்பதை உறுதிசெய்ய உறுதியான வழிமுறைகளை நிறுவுதல்.
3. போர்ச் சேதங்கள் மற்றும் இழப்பீடுகள் வழங்கப்படுவதை உறுதிசெய்யும் தெளிவான வரையறைகளை வழங்குதல்.
4. பிராந்தியத்தில் உள்ள அனைத்து முனைகளிலும் மற்றும் அனைத்து எதிர்ப்புக் குழுக்களுக்கும் எதிரான போரை முடிவுக்குக் கொண்டுவருதல்.
5. ஹர்முஸ் நீரிணையின் மீது அதிகாரம் செலுத்துவதற்கான ஈரானின் இறையாண்மை உரிமைக்கு சர்வதேச அங்கீகாரம் மற்றும் உறுதிமொழிகள்.
நல்லெண்ணத்துடன் செயல்படும் அனைத்து இடைத்தரகர்களுக்கும், அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்வதைப் பொறுத்தே போர் நிறுத்தம் அமையும் என்று ஈரான் தெரிவித்துள்ளது. அதற்கு முன்பு எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறாது, என அந்த அதிகாரி வலியுறுத்திக் கூறியுள்ளார்.
கூறப்பட்ட நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை ஈரானின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடரும் என்றும் மீண்டும் உறுதிப்படுத்தினார்.