கந்தளாயில் சட்டவிரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 100 லீட்டர் டீசல் பறிமுதல்: ஒருவர் கைது .
கந்தளாய் யூசுப் - Sri Lanka - Reporter for MEIVELI

விற்பனைக்காக சட்டவிரோதமான முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 100 லீட்டருக்கும் அதிகமான டீசல் எரிபொருளை கந்தளாய், கித்துளுத்து பகுதி கடையொன்றில் வைத்து பொலிஸார் இன்று (24) பறிமுதல் செய்துள்ளனர்.
சூரியபுர பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கந்தளாய் அக்போபுர பொலிஸாருடன் இணைந்து இந்த விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, விற்பனைக்குத் தயாராக இருந்த 100 லீட்டருக்கும் அதிகமான டீசல் கைப்பற்றப்பட்டதுடன், இது தொடர்பாக ஒரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும், கைப்பற்றப்பட்ட டீசல் அடங்கிய எரிபொருள் கொள்கலன்களையும் இன்று கந்தளாய் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

