புதுச்சேரியில் 3 தொகுதிகளில் தேமுதிக போட்டி: திமுகவை கதிகலங்க வைத்த பிரேமலதா
Meiveli Media Team

புதுச்சேரி இண்டி கூட்டணியில் திமுக, காங்கிரஸ், வி.சி.க., கட்சிகளுக்குள் இருக்கும் பிரச்னைகளே இன்னும் தீராத நிலையில், தேமுதிகவும் போட்டியிடும் என்று பிரேமலதா அறிவித்தார். புதுச்சேரி சட்டசபை தேர்தல், அடுத்த மாதம் ஏப்ரல் 9ம் தேதி நடக்கவுள்ளது. என்ஆர் காங்கிரஸ் – பாஜ இடையே தொகுதி பங்கீடு முடிவாகி உள்ளது. என்ஆர் காங்கிரஸ் 16, பாஜ 10, அதிமுக 2 லஜக 2 தொகுதிகளில் போட்டியிட இருக்கிறது. இன்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவு பெறும் சூழலிலும் இண்டி கூட்டணியில் தொகுதி பங்கீடு விவகாரம் முடிந்தபாடு இல்லை. நீண்ட இழுபறிக்கு பிறகு இண்டி கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதியானது. காங்கிரஸ் -16, திமுக-12, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தலா ஒரு இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனாலும் முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு சீட் தர மறுக்கப்பட்டதாக கூறி, மாநில தலைவர் வைத்திலிங்கம் வீட்டு வாசலில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

