மகிந்த ராஜபக்‌ஷ மற்றும் நாமல் ராஜபக்‌ஷவை காட்டிக் கொடுக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அழுத்தம்:பொதுஜன குற்றச்சாட்டு

Meiveli Media Team

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவை அச்சுறுத்தி ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ மற்றும் நாமல் ராஜபக்‌ஷவின் பெயரை கூறுமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அழுத்தம் கொடுத்துள்ளது என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரான சானக மாதுகொட தெரிவித்தாரர். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை மத்திய கிழக்கின் போரினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் நடைபெற்ற போதுஇ ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவர் இதனை கூறினார். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கபில சந்திரசேகரவை அச்சுறுத்தி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ மற்றும் நாமல் ராஜபக்‌ஷவின் பெயரை கூறுவதற்கு அவருக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக நீதவான் நீதிமன்றத்தில் வழங்கிய வாக்குமூலத்தை நான் சபையில் முன்வைக்கின்றேன். அவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்தும் அழுத்தம் கொடுத்துமே மகிந்த ராஜபக்‌ஷவினதும் நாமல் ராஜபக்‌ஷவினதும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.