சர்வதேச விசாரணை நடத்துவதை அரசாங்கம் எதிர்க்கிறது: நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவிப்பு
Meiveli Media Team

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்துவதை அரசாங்கம் எதிர்ப்பதாக, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று சாணக்கியன் இராசமாணிக்கம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.
2009-ஆம் ஆண்டுபோரின் இறுதிக் கட்டங்களில் சுமார் 2,764 பேர் காணாமல் போயுள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கை விவாதத்திற்குரியது.
காணாமல் போனவர்கள் குறித்த துல்லியமான தரவுகள் எதுவும் இல்லை. போரின் போது இரு தரப்பினரும் பலவந்தமாக காணாமல் ஆக்குவதில் ஈடுபட்டுள்ளனர், எனினும் அரசாங்கம் அத்தகைய செயல்களை ஆதரிக்கவில்லை.காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து எந்தவொரு அனைத்துலக அமைப்புகளும் விசாரிப்பதை அரசாங்கம் எதிர்க்கிறது என்றும் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.அதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நீதி அமைச்சர் வெளியிட்ட தகவலை ஏற்க முடியாது என சாணக்கியன் குறிப்பிட்டார். பொறுப்புக்கூறல் தொடர்பிலும், நீதியை வழங்குவதிலும் அரசாங்கத்திடம் தெளிவான கொள்கை இல்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

