ஐராப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா மீண்டும் இணைவு: கட்சிக்குள் வலுக்கும் வாதம்
Meiveli Media Team
ஆளும் தொழிற் கட்சியில் ஐராப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியாவின் செல்வாக்கை மீண்டும் அதிகரிப்பது தொடர்பான கருத்துகள் வலுப்பெற்றுள்ளன.
ஏற்கனவே செய்துகொண்டுள்ள உடன்படிக்கை தொடர்பில் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும் என பிரதமர் ஸ்டார்மருக்கு தொடர்ச்சியான அழுத்தங்கள் ஆளுங்கட்சிக்குள் கொடுக்கப்பட்டு வரும் பின்புலத்தில் லண்டன் மேயர் சாதிக் கான் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சுங்க ஒன்றியம் மற்றும் தனியார் சந்தைகயில் இணைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேயர் சாதிக் கானின் கருத்து மற்றும் கட்சிக்குள் வலுப்பெற்றுவரும் இது தொடர்பான கருத்துகள் பிரதமர் ஸ்டார்மரின் நிலைப்பாட்டுக்கு முரணானதாகும். ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியாவின் செல்வாக்கை அதிகரிப்பது அல்லது மீண்டும் சேர்வது குறித்து வெளிப்படுத்தப்படும் கருத்துகள் ஆளுங்கட்சிக்குள் மோதல் போக்கை அதிகரிக்கும் என்பதுடன், பொதுமக்களின் ஆதரவு குறைவதற்கும் வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

