ரஜினி – விஜய் ரசிகர்கள் இடையேயான  மோதல் போக்கு அதிகரிப்பு

Meiveli Media Team

தமிழக வெற்றிக் கழகத்தின்  நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்துப் பேசிய கருத்துக்கள் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி ரசிகர் மன்ற நெல்லை மாவட்ட துணைச் செயலாளர், ‘எங்களைத் தொட்டவர்களை நாங்கள் இதுவரை விட்டதே இல்லை’ என்று ஆவேசமாகத் தெரிவித்தார். மேலும், தவெக எங்கெல்லாம் போட்டியிடுகிறதோ, அங்கெல்லாம் ரஜினி ரசிகர்கள் சுயேச்சையாகக் களமிறங்கி அவர்களுக்குப் போட்டியாக வேலை செய்வார்கள் என்றும் அவர் அதிரடியாக அறிவித்துள்ளார்.தாம் ஏற்கனவே நெல்லையில் போட்டியிட வேட்புமனு வாங்கியுள்ளதாகத் தெரிவித்த அவர், நடிகர் விஜய் எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்துப் போட்டியிடத் தயாராக இருப்பதாகவும் சவால் விடுத்துள்ளார். ரஜினி – விஜய் ரசிகர்கள் இடையேயான இந்த மோதல் போக்கு, தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.