நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறி விபத்து.

ச. ஞான‌ பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரதல்ல குறுக்கு வீதியில் இன்று மாலை (16) லொறி ஒன்று செங்குத்தான வளைவு ஒன்றில் கட்டுப்பாட்டை இழந்து மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த லொறியில் திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தால் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர் தப்பியுள்ளனர் எனவும் விபத்தில் லொறி கடுமையான சேதத்துக்கு உள்ளாகியதாகத் தெரிவித்த நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.