கே.பியுடன் டீல் பேசியது மகிந்தவும் – கோட்டாபயவும் : முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா கருத்து
Meiveli Media Team

கே.பி விமான நிலையத்தில் இருந்து நேரடியாக கோட்டாபயவின் வீட்டுக்கே அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். கே.பியுடன் டீல் பேசியது மகிந்தவும் – கோட்டாபயவும் தான் என தெரிவித்துள்ளார் முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா. சிறையில் அடைத்து வைக்கப்பட்டவில்லை. பின்னர் அவர் யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.கே.பியிடம் இருந்த கப்பல்கள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பணம் போன்றவற்றுக்கு என்ன நடந்தது என்று கோட்டாபய தான் அறிவார். அதன் பின்னர் கே.பியுடன் டீல் பேசியது மகிந்தவும் – கோட்டாபயவும் தான். அவர்கள் என்ன செய்தார்கள் என எங்களுக்கு தெரியாது. கே.பிக்கு எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

