ஹார்முஸ் நீரிணையில் 1,000 கப்பல்கள் தெங்கி நிறபதாக தகவல்
Meiveli Media Team

ஈரான் தாக்குதல்களை அதிகரித்துள்ள நிலையில் ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் 200 க்கும் மேற்பட்ட எண்ணெய் டேங்கர்கள் உட்பட சுமார் 1,000 கப்பல்கள் தற்போது வரிசையில் காத்திருப்பதாக அசோசியேட்டட் பிரஸ் நிருபர் இன்சமாம் ரஷீத் தெரிவித்துள்ளார். ஹார்முஸ் பகுதியில் ஈரான் இராணுவத்தின் கட்டுப்பாடு அதிகரித்துள்ளதால் அந்த நீரிணை வழியாக செல்லும் கப்பல்கள் தற்போது பெரிய ஆபத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். குறித்த நீரிணை வழியாக கடக்க முயலும் எந்த கப்பலும் தாக்குதலுக்கான இலக்காக மாறும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
கடந்த சில நாட்களில் இவ்வாறான பல சம்பவங்கள் இடம்பெற்றதையும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை இந்த பதற்றத்தின் விளைவாக ஹார்முஸ் நீரிணை வழியாக கடத்தப்படும் எண்ணெய் அளவு கடுமையாக குறைந்துள்ளது. சாதாரணமாக ஒரு நாளுக்கு 20 மில்லியன் பீப்பாய் எண்ணெய் இந்த வழியாக கொண்டு செல்லப்பட்ட நிலையில், பெருமளவு குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

