VPL 2026 2026 போட்டிகளுக்கான வீரர்களைத்; தெரிவு செய்யும் ஏல நிகழ்வு லண்டனில் களைகட்டியது
Meiveli Media Team

பிரித்தானியத் தமிழ் விளையாட்டு 4மூகங்களுக்கடையில், மிகப்பெரிய கரப்பந்தாட்ட திருவிழாவாகக் கருதப்படும் VPL 2026 2026 போட்டிகளுக்கான களைகட்டும் முன்னோட்டம் இன்று லண்டனில் ஆரம்பமானது. அணிகளுக்கிடையேயான பரபரப்பான போட்டிகளுக்கு முன்னதாக, 2026 ஆம் ஆண்டுக்கான வீரர்கள் தேர்வு செய்யும் பெரும் ஏல நிகழ்வு இன்று மாலை 5 மணி அளவில் ஹவுன்ஸ்லோவில் உள்ள Honeymoon Banqueting Hall மண்டபத்தில் நடைபெற்றது. பிரித்தானியத் தமிழ் அணிகளுக்கு வீரர்கள் ஏலம் எடுக்கும் மரபை முதன்முதலாக அறிமுகப்படுத்திய VPL ஏற்பாட்டாளர்கள், இந்த ஆண்டும் அதிரடியான ஏல நிகழ்வை நடத்துயிருந்தனர். லண்டன் மட்டுமல்லாமல், ஐரோப்பாவின் பல பகுதிகளில் இருந்து முன்னணி வீரர்கள் இந்த ஏலத்தில் இடம்பெற்றுள்ளனர்.
50 வயதிற்குட்பட்ட வீரர்கள் கலந்து கொள்ளும் 12 அணிகளும், 50 வயதைத் தாண்டிய வீரர்கள் மோதும் 6 அணிகளும்,
மொத்தமாக 18 அணிகள் இந்த வருட VPL போட்டிகளில் களமிறங்குகின்றன. Romeo November, Leo, Wales Tiger, Vanniyan, Mikasa Kings, Hunters, Oskar Leema, United Riders, Phoenix, Jaguars, Six Warriors, UK Thunder Fighters, Prime Legends, Volleyball Kings, Thai Mann, Bigfoot Club, UK Tamil United மற்றும் London Fire போன்ற அணிகள் இந்த ஆண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவுள்ளன. இந்த பரபரப்பான வீரர்கள் ஏல நிகழ்வு இன்று மாலை 5 மணிக்கு மெய்வெளி தொலைக்காட்சியில் நேரலையாக காண்பிக்கப்பட்டது. இந்த ஆண்டின் வெற்றிக்கிண்ணத்தை தமதாக்கப்போகும் அணி எது?
அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களை கவரப்போகும் வீரர்கள் யார்? என்ற எதிர்பார்ப்ப அரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு VPL போட்டிகள் வருகிற ஏப்ரல் 11 மற்றும் 12 ஆகிய இரண்டு நாட்களில் நடைபெறவுள்ளன. £6000 பெறுமதியான மிகப்பெரிய பணப் பரிசு இந்த போட்டிகளில் வழங்கப்பட உள்ளளமை குறிப்பிடத்தக்கது.

