ஊழலற்ற புதிய ஆட்சியின் கீழ் இலங்கை சர்வதேச வர்த்தக மையமாக மாறும்: அமைச்சர் விஜித ஹேரத் இந்தியாவில் தெரிவிப்பு
ச. ஞான பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

இந்தியாவில் நடைபெற்ற ரைசினா கலந்துரையாடலுக்கு (Raisina Dialogue) இணையாக, ஒப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷன் (ORF) அமைப்பின் தலைவர் சன்ஜோய் ஜோஷி (Sunjoy Joshi) அவர்களுடன் இடம்பெற்ற விசேட நேர்காணலின் போது அமைச்சர் விஜித ஹேரத் அவர்கள் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டார்.
நாட்டில் ஊழலை முற்றாக ஒழிக்கும் புதிய அரசாங்கம் உருவாகியுள்ளதன் காரணமாக, இலங்கை மிக விரைவில் சர்வதேச வர்த்தக மையமாக (International Trade Hub) உருவெடுக்கும் என்பதை அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இலங்கையில் தற்போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான சாதகமான சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குறிப்பாக, எளிமையான மற்றும் வெளிப்படையான வரி முறைமை, முதலீட்டு நடவடிக்கைகளை இலகுபடுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள ஏகச்சாளர முறைமை (Single Window System) மற்றும் புதிய முதலீட்டுப் பாதுகாப்புச் சட்டமூலம் ஆகியவற்றின் ஊடாக இந்த நம்பிக்கையான முதலீட்டுப் பின்னணி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் மேலும் விளக்கமளித்தார்.

