இலண்டன் தமிழ் சந்தை 2026 – London Tamil Market -2026
Sathees Navaratnam for MEIVELI

2015 ல் ஆரம்பித்து இன்று மிகப்பிரமாண்டமாக வளர்ந்து நிற்கின்றது இந்த இலண்டன் தமிழ் சந்தை (London Tamil market). பல பொருட்களை சந்தைப்படுத்துதலுக்கான அங்காடிகள், சேவைமையங்கள் மற்றும் பல ஆலோசனை அமைப்புகள் என பலதரப்பட்ட மக்களை மகிழ்வூட்டவும் தமது வியாபாரங்களை மேம்படுத்தவும் பல வர்த்தக முகவர்கள் இங்கு வருகை தந்திருந்தார்கள். அத்தோடு இங்கே பல கலை கலாச்சார நிகழ்வுகளும் அரங்கேறி கொண்டிருந்தன.
முன்பு ஒரே அரங்கில் நடைபெறும் நிகழ்வுகளால் சேவை சார்ந்த வர்த்தக முகவர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையேயான தொடர்பாடல் “சத்தம் மற்றும் நெருக்கடி” போன்ற பல பிரச்சனைகளை சந்தித்தது. அதை கருத்தில் கொண்டு British Tamil Chamber of Commerce (BTCC) ஒருங்கிணைப்பாளர்கள் அதை இரண்டு அரங்கங்களில் இம்முறை நடத்தியிருந்தார்கள். இந் நிகழ்வுகள் மூலம் ஒவ்வொரு வருடமும் வரும் புதிய வியாபாரங்களைவிட இம்முறை அதிக வியாபாரங்களை பல வர்த்தகர்கள் பெற்றதாக அவர்கள் தமது நன்றியை BTCC க்கு தெரிவித்து இருந்தார்கள்.
இரண்டு நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 7000 க்கும் அதிகமான மக்கள் அரங்கங்களை நிறைத்திருந்தார்கள்.
கலை நிகழ்வுகளை பார்வையிட அமைந்த அரங்க அமைப்பு பலரும் இருந்து பார்ப்பதற்கு மிகவும் இலகுவாக அமைந்தது.
CRYSTAL இந்த நிகழ்விற்கு முதன்மை அனுசரனையாளர்களாக இருந்தமையால் வரும் வாடிக்கையாளர்களுக்கான பலவகையான உணவு சுடச்சுட தடையின்றி மிக விரைவாக கிடைக்க உதவியது.
முதன்முறையாக இந்த வருடம் பிரமாண்டமாக BTCC ம் The Gate Institute ம் இணைந்து புதிய வியாபார ஆரம்பிப்பாளர்களுக்கான பகுதி (Startup Corner) ஒன்றை உருவாக்கி இருந்தார்கள் . இந்த வருடம் அதற்கான தகுதியாக “25 வயதுக்கு குறைவானவர்கள் அல்லது வியாபாரம் ஆரம்பித்து மூன்று வருடத்துக்கு குறைவான கால அளவு” என நிர்ணயித்து இருந்தார்கள்.
இதில் மொத்தமாக 13 வியாபார ஆரம்பிப்பாளர்கள் (Startup) கலந்துகொண்டார்கள்.
அவர்கள் விபரம் கீழ் தரப்பட்டுள்ளது.
Startups
1. All connect- for dental practices – mordenise dental services improve patient care
2. Solandiam inv consulting group -global solutions for trade and legal issues
3. Carbon magic – digital innovation in research engineering etc
4. Mojoboxes- life coach by two sisters
5. 100percent – power bank charger for events and restaurants
6. Yosha tech – building planning permission etc
7. Karaflect-storytelling electronically
8. Part chain ltd – aviation parts and developments
9. Upview technologies- AI driven products
10. Zetra AI- 16 yr old young lady using AI to provide services to businesses
11. Co Ed fication- simplify education
12. Rivaan career coaching
13. Thillu mullu – young Tamils developing culture and networking amongst youngsters
மிக சிறப்பாக அமைந்த நிகழ்வில் மிகவும் சிரம்மாக அமைந்த இரண்டு விடையங்களாக வாகன தரிப்பிட பிரச்சனையும் வயதானவர்கள் மாடிப்படி ஏற சிரம்ம்பட்ட விடயமும் மக்களால் முன்வைக்கப்பட்டன. இந்த இரண்டு கேள்விகளுக்கும் BTCC நிர்வாக குழு தந்த பதில் என்னவென்றால் “ ஒவ்வொரு வருடமும் நிகழ்வின்பின் வரும் குறைபாடுகளை தாம் முழுதாக கருத்தில் எடுத்து அக்குறைகளை நிவர்த்திசெய்ய தாம் முயற்சிப்பதாகவும் அத்தோடு CRYSTAL நிர்வாகத்தோடு பேசி வரும் வருடங்களில் இவை தீர்க்கப்படும் என உறுதியளித்தார்கள்.
மக்களின் பெரும் ஆதரவைப் பெற்ற இந்த நிகழ்வு வரும் வருடங்களில் பல புதிய விடயங்களுடன் மக்களுக்கு மேலும் பல பயனுள்ள திட்டங்களையும் தகவல்களையும் முன்கொண்டுவர உள்ளதெனவும், தமிழ் மக்களின் வியாபார முன்னெடுப்புகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த உறுதுணையாக இருக்கும் எனவும் கூறினார்கள்.
British Tamil chamber of commerce இந் நிகழ்வுகளை “London Tamil Market” என நடத்தியது இங்கு குறிப்பிடத்தக்கது. இவர்கள் கடந்த காலங்களில் பல நிகழ்வுகளை நடாத்தி வந்தார்கள் எனவும் வரும் காலங்களில் மேலும் பல்நிகழ்வுகளை நடாத்த உள்ளார்கள் எனவும் சுட்டிக்காட்டினார்கள்.




இந் நிகழ்வுகளை மக்களிடம் கொண்டுசெல்ல மெய்வெளி Media partner ஆக கலந்துகொண்டதில் பெருமை கொள்கின்றது.


