ஹார்முஸ் தடை செய்தால் 20 மடங்கு பதிலடி – டிரம்ப் கடும் எச்சரிக்கை!
Meiveli Media Team

மெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீது கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில்இ ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் போக்குவரத்தை ஈரான் தடுத்தால், அமெரிக்கா 20 மடங்கு கடுமையான பதிலடி கொடுக்கும் என்று அவர் மிரட்டியுள்ளார். இந்த அறிக்கை சமூக வலைத்தளங்களில் வெளியாகி உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. டிரம்ப் தனது அறிக்கையில், ‘ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் போக்குவரத்தை ஈரான் தடுத்தால், அவர்கள் இதுவரை சந்தித்ததை விட 20 மடங்கு கடுமையான தாக்குதலை அமெரிக்காவிடம் இருந்து சந்திப்பார்கள்’ என்று தெளிவாக எச்சரித்துள்ளார். இதனால் ஈரான் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியாத அளவுக்கு எளிதில் அழிக்கக்கூடிய இலக்குகளை தாக்குவோம் என்றும் அவர் கூறியுள்ளார். மரணம், தீ, கோபம்’ போன்றவை ஈரான் மீது பொழியும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.இருப்பினும், இத்தகைய சம்பவம் நடக்காமல் இருக்க வேண்டும் என்று தான் விரும்புவதாகவும், கடவுளிடம் பிரார்த்தனை செய்வதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த எச்சரிக்கை சீனா உள்ளிட்ட ஹார்முஸ் நீரிணையை அதிகம் பயன்படுத்தும் நாடுகளுக்கு அமெரிக்காவின் ‘பரிசு’ என்று அவர் விவரித்துள்ளார். இது அந்த நாடுகளுக்கு பெரும் பாராட்டுக்குரிய செயல் என்றும் அவர் கூறியுள்ளார். ஹார்முஸ் நீரிணை உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையாகும். இதை ஈரான் தடுத்தால் உலக அளவில் எண்ணெய் விலை உயர்வு, பொருளாதார நெருக்கடி போன்றவை ஏற்படும். டிரம்பின் இந்த அறிக்கை ஈரானுக்கு கடும் அழுத்தத்தை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. போர் தொடரும் நிலையில் இது மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த அறிக்கை அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை வெளிப்படுத்துவதாக உள்ளது. சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு ‘பரிசு’ என்று கூறியது, அமெரிக்காவின் கூட்டணி நாடுகளுடனான உறவை வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. ஈரான் தரப்பில் இதற்கு உடனடி பதில் இல்லை என்றாலும், போர் நிலைமை மேலும் சிக்கலாகலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

