2 மாடிகளில் 120 க்கு மேற்பட்ட வியாபார நிறுவனங்கள்: 7000க்கும் மேற்பட்ட  மக்கள்: களை கட்டிய லண்டன் தமிழர் சந்தை 2026

Meiveli Media Team

லண்டனில் கடந்த சனி ஞாயிறு தினங்களில் லண்டன் தமிழர் சந்தை கூடியது.  12வருடங்களாக  நடைபெற்று வரும் லண்டன் தமிழ்ச் சந்தை இவ்வருடம் பெரும் எழுச்சியைக் கண்டிருந்தது. புலம்பெயர்ந்த தேசத்தில் தமிழ் வியாபார நிறுவனங்களுக்கடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி  ஒன்றுபட்ட உயர்தலலால் தமிழ் இன  பொருளாதார வளர்ச்சிக்கு உதவ முடியும் என்ற  நோக்கத்தொடு லண்டன் தமிழ்வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில்  தமிழர் சந்தை லண்டனில் ஹெயிசில் அமைந்துள்ள கிறிஸ்ரல் பங்குயிற்ரிங் மண்டபத்தில் நடைபெற்றது. 2 மாடித்தளங்களில் 120க்கு மேற்பட்ட வியாபார நிறுவனங்கள்  தங்கள் ஸ்ரோல்களை அமைந்திருந்தன. 7000க்கு மேற்பட்ட மக்கள் பங்கேற்றிருந்தனர். இந்த  சந்தையில் பல துறைகளை உள்ளடங்கலான வணிக நிறுவனங்கள், புதிய தொழில் முனைவோர் முதல் விஸ்தரிக்கப்பட்ட வியாபார நிறுவனங்கள் வரை பல வணி நிறுவனங்கள் தங்கள் நடவடிக்கைகளை காட்சிப்படுத்தியிருந்தன. வேலைவாயப்புகள், டிஜிட்டல் தொழில்நுட்பம், கல்வி , நிதி சேவைகள், சொத்து மற்றும் கட்டுமானம், ரீட்டெயில் வணிகம், சுற்றுலா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என பலதரப்பட்ட நிறுவனங்களை காணக்கூடியதாக இருந்தது.  இதேவேளை, பிரித்தானி தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் ஒரு அலகான புகற் iவெவைரவந  தமிழ் தொழில்முனைவோர்களுடன் சந்திப்பை ஏற்படுத்தி, அவாகுளுக்கான  தொடர்புகளை உருவாக்கி, பயனுள்ள கூட்டாண்மைகள் மற்றும் ஒத்துழைப்புகளை வளர்த்துக்கொள்ளளும’ வகையில்  நிகழ்வுகளுமு; ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தன. பலவர்த்தகஇ அறிவியல் நிபுணர்களின் சிநேட உரைகள் கீழ்த் தளத்தில் இடம்பெற , பொழுதுபோக்கிற்கான கலாசார இசை நிகழ்வுகள் மேடையில் நடைபெற்றன. பிரித்தானியாவின் பல பாகங்களிலும் இருந்து மக்கள் திரள் திரளாக வருகை ச்திருந்ததோடு, தங்கள் வர்த்தகத்தை பிரபல்யப்படுத்திய மக்கள் மத்தியல் கொண்டு சேர்க்க இந்த லண்டன தமிழர் சந்தை பெரும் களமாக அமைந்திருந்ததாக பல சியாபார நிறுவனங்கள் தொரிவித்திருந்தன.

12 வத வது ஆண்டாக நடைபெற்ற லண்டன் தமிழர் சந்த  இங்கிலாந்தின் தமிழர் விழாக்களில் மிகப்பெரிய வணிக விழாவாக கருதப்படுகிறது. இந்த விழா மூலம் தமிழ் வணிகங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து புதிய யோசனைகளை பகிர்ந்து, புலம்பெயர் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க முடியும் என்பதோடு தயாக வாத்தக தொடர்புகளையும் விஸ்தரிக்க வழி அமைக்கும்  என்று ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.