கும்மிடிப்பூண்டி,இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் தலைவர் கொலை:இரு பெண்கள் உட்பட ஆறுபேர் கைது
Meiveli Media Team

கும்மிடிப்பூண்டி,இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் தலைவரை கொலை செய்த, இலங்கை தமிழர்களான இரு பெண்கள் உட்பட ஆறு பேரை, கும்மிடிப்பூண்டி போலீசார் கைது செய்தனர். கைதானோரை வேறு முகாமிற்கு மாற்றக்கோரி, அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டதால், சென்னை – கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடங்கியது. கைதானவர்களை சிறப்பு முகாமுக்கு மாற்றுவதாக,
எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தால்தான்,சிவகுமாரின் உடலை பெற்றுக்கொள்வோம்’ என, திட்டவட்டமாக தெரிவித்தனர். பத்து ஆண்டுகளுக்கு முன் சிவகுமாரும், சுவேந்திரன் குடும்பத்தினரும்இ அருகருகே முகாமில் வசித்து வந்தனர். வீட்டை சுற்றி வேலி அமைப்பதில், அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு, அடிதடியில் முடிந்தது. இதனால், சிவகுமார் குடும்பத்தினர், முகாமிற்குள் வேறு இடத்திற்கு மாறினர். இந்நிலையில், சிவ குமார் தலைவரான பின் நடந்து கொண்ட விதம், சுவேந்திரன் குடும்பத்தினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் இரவு, சுவேந்திரன் வீட்டு வழியாக, வேறு ஒரு பிரச்னைக்காக சிவகுமார், மூன்று முறை சென்று வந்துள்ளார். அப்போது, சுவேந்திரனின் அண்ணன் மகேந்திரனுக்கும், சிவகுமாருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சுவேந்திரன், இரும்பு ராடால் சிவகுமாரின் தலையில் தாக்கியுள்ளார். தடுமாறி விழுந்த சிவகுமாரை, சுவேந்திரன் மற்றும் மகேந்திரன் குடும்பத்தினர், உருட்டு கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளனர் என பொலிஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகுமாரின் உடலை பெற மறுப்பதால், அவரது குடும்பத்தாரை சமாதானம் செய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். முகாமில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

