வடக்கின் பெரும் போர் : 119 அவது மாபெரும் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பம்

Meiveli Media Team

வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 119 அவது மாபெரும் கிரிக்கெட் போட்டி இன்று யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது. இரண்டு கல்லூரிகளின் கீதத்துடன் சம்பிரதாயபூர்வமாக வீரர்களின் அறிமுகத்துடன் போட்டி ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி சென்ஜோன்ஸ் கல்லூரி துடுப்பெடுத்தாடி வருகிறது. குறித்த போட்டி நாளை மற்றும் நாளை மறுநாள் என மூன்று நாட்கள் இடம்பெறவுள்ளன.

இதேவேளை இரண்டு கல்லூரிகளுக்கும் இடையே நடைபெற்றுவரும் 23 ஆவது மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர் கொண்ட ஒரு நாள் போட்டி மார்ச்

14 ஆம் திகதி யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.