ஈரான் போர்க் கப்பலை இலங்கைக்கடற்பரப்பில் மூழ்கடித்தது தாமே: உறுதிப்படுத்தினார் அமெரிக்கா பாதுகாப்பு செயலாளர்
Meiveli Media Team

அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலிலேயே ஈரான் போர்க் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது என்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கை தெற்கு கடற்பரப்புக்கு அப்பால் உள்ள பகுதியில் இந்து சமுத்திரத்தில்இலங்கை நேரப்படி இன்று அதிகாலை ஈரான் கப்பல் இவ்வாறு தாக்குதலுக்கு இலக்கானது. போர்க் கப்பல் அனர்த்தத்துக்கு உள்ளானதை என்ற தகவலை மட்டுமே வெளியிட்ட இலங்கை கடற்படை, தாக்குதலுக்கு இலக்கானதா என்பது பற்றி உறுதியாக கூறவில்லை. விசாரணைகளின் பின்னரே அது பற்றி தெரிவிக்க முடியும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையிலேயே அமெரிக்க தரப்பில் இருந்து குறித்த கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் டொர்பிடோ தாக்குதல் மூலம் மூழ்கடித்ததாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் அறிவிப்பை வெளிப்படுத்தியுள்ளார். . அதி நவீன தொழில்நுட்பங்களுடன் ஈரானின் சொந்த தயாரிப்பிலேயே மேற்படி கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது.

