ஈரானிய போர்: பிரெஞ்சு இராணுவத்தளம் ஒன்றை அமெரிக்க இராணுவம் பயன்படுத்த ஒப்புதல்
Meiveli Media Team

பிரெஞ்சு இராணுவத்தளம் ஒன்றை அமெரிக்க இராணுவம் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை பிரெஞ்சு இராணுவ ஜெனரல் இன்று தெரிவித்தார். Istres பிராந்தியத்தில் உள்ள பிரெஞ்சு இராணுவத்தளத்தை அமெரிக்காவுக்கு வழங்கியுள்ளது. ஆனால் இங்கிருந்துகொண்டு தாக்குதல் நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்ளக்கூடாது எனும் நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய சகலநடவடிக்கைகளுக்கும் இந்த தளம் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஈரான் யுத்தத்தில் பங்கேற்றுள்ள அமெரிக்கா, இந்த தளத்தை பல தேவைகளுக்காக பயன்படுத்த உள்ளது.
மோதலின் தொடக்கத்திலிருந்து,பிரான்ஸ் ‘கண்டிப்பாக தற்காப்பு’ நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வருவதாக இம்மானுவேல் மக்ரோன் கூறினார். பிரெஞ்சு ஜனாதிபதி செவ்வாய்க்கிழமை மாலையில் கிழக்கு மத்தியதரைக் கடலுக்கு விமானம் தாங்கிக் கப்பல் சாள்-து-கோல் உட்பட குறிப்பிடத்தக்க இராணுவ வளங்களை நிலைநிறுத்துவதாக அறிவித்தார்.

