🚨 முக்கிய அறிவிப்பு: கொலையாளி குறித்த தகவல் தேடல்! 🚨

ச. ஞான‌ பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

​கடந்த 2026 பெப்ரவரி 13 ஆம் திகதி தலங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்படும் சந்தேகநபர் குறித்த விபரங்களை பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ளது.

​மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் அடிப்படையில், குறித்த சந்தேகநபரின் அடையாளங்கள் பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளன:

​சந்தேகநபரின் விபரங்கள்:

​உயரம்: சுமார் 5 அடி 5 அங்குலம்.
​வயது: சுமார் 44 வயது.
​நிறம்: கருமை கலந்த மாநிறம் (கண்களில் ஒருவித மஞ்சள் மற்றும் பழுப்பு நிறம் தென்படலாம்).
​விசேட அடையாளம்: முகத்தின் வலது பக்க தாடைக்குக் கீழே ஒரு தழும்பு (வெட்டுக் காயம் போன்ற வடு) காணப்படுகிறது.

​குறித்த சந்தேகநபரின் தற்போதைய தோற்றம் எவ்வாறு இருக்கலாம் என்பதை AI தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

​பொதுமக்களின் உதவி தேவை!

​மேற்குறிப்பிட்ட நபர் தொடர்பாக ஏதேனும் தகவல் கிடைத்தால், உடனடியாக பின்வரும் தொலைபேசி எண்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்:

​📞 பிரதிப் பொலிஸ் மா அதிபர் (மேல் மாகாண வடக்கு): 071 – 8598008
📞 பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரி (நுகேகொடை): 071 – 8591641
📞 இயக்குனர் (மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு): 071 – 8592279

​இந்தச் செய்தியைப் பகிர்ந்து குற்றவாளியைக் கண்டறிய உதவுங்கள்!