நுவரெலியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு – நுகர்வோர் பெரும் சிரமம்

ச. ஞான‌ பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

நுவரெலியா பிரதான நகரில் லாஃப் மற்றும் லிட்ரோ சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாக நுவரெலியா மற்றும் நானுஓயா பிரதேசங்களில் வரிசையில் காத்திருந்து சமையல் எரிவாயுவை பெற்றுச் செல்கின்றன.

எனினும் எதிர்வரும் நாட்களில் எரிவாயு தட்டுப்பாடு நிலவும் என இன்று (19) பொதுமக்கள் தேவையற்ற விதத்தில் பீதியடைந்து சிலிண்டர்களைக் கொள்வனவு செய்ய நீண்ட நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

நீண்ட வரிசையில் காத்திருந்து எரிவாயு சிலிண்டர் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பும் நிலையும் நிலவுகிறது விநியோகம் குறைவாக இருப்பதாலும், தேவை அதிகமாக இருப்பதாலும் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இது அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது.

நுவாரெலியாவில் பிரதான இடங்களில் வழமையைவிடக் குறைவான அளவு சிலிண்டர்களே விநியோகிக்கப்படுவதாக விநியோகஸ்தர்கள் கூறுகிறார்கள் இன்னும் சில இடங்களில் விநியோகம் தாமதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பகுதிகளில் அறவே விநியோகிக்கப்படாமல், முடங்கியுள்ளதாகத் தெரியவருகிறது இரண்டு வகை சமையல் எரிவாயுகளில் ஒன்றை கூட கொள்வனவு செய்ய முடியாது நுகர்வோரும் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.