பிரித்தானியாவில் பொதுத் தேர்தலை ஒத்திவைப்பதால் பாதிக்கப்படப்போவது கன்சர்வேடிவ் கட்சி

Meiveli Media Team

 

பிரித்தானியாவில் பொதுத் தேர்தலை ஒத்திவைப்பது தொழிற்கட்சியை விட கன்சர்வேடிவ் கட்சியை கடுமையாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

30 பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், கருத்துக்கணிப்பு நிபுணர் சர் ஜான் கர்டிஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

கன்சர்வேடிவ் கட்டுப்பாட்டில் உள்ள கவுன்சில்களில் பல நைகல் ஃபராஜின் சீர்திருத்த பிரித்தானிய கட்சிக்கு ஆதரவு கரம் நீட்ட வாய்ப்புள்ளதாகவும், இதனால் கன்சர்வேடிவ் கட்சி பாதிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தலை ஒத்திவைக்கும் நடவடிக்கையை தேர்தல் ஆணையம், எதிர்க்கட்சிகள் மற்றும் உள்ளூர் அதிகாரசபைத் தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.