மீண்டும் பதவிக்கு வருவேன்: எம்பி சிவஞானம் சிறீதரன் கருத்து

Meiveli Media Team

இலங்கை தமிழரசுக் கட்சியின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு பதவியில் இருந்து சிவஞானம் சிறீதரன் விலக்கப்பட்டதிலிருந்தது அக்கட்சிக்குள் நடக்கும் பல விடயங்கள் அம்பலமாகி வருகின்றன.  இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவஞானம் சிறீதரன், தான் தெரிவு நிலை பதவியில் இன்னும் இருப்பதாக குறிப்பிட்டார். மேலும் அவர், திருகோணமலை நீதிமன்றத்தில் என் மீதான தடை எப்போது நீக்கப்படுகின்றதோ, அப்போது அடுத்த நொடியே நான் பதவியேற்கலாம். ஆகவே, நான் அந்த நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கின்றேன். அவ்வாறு நான் மீண்டும் பதவியேற்கும் போது, அனைவரையும் அரவணைத்து தான் செல்ல வேண்டும் என கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.