பிரித்தானியர் காலத்து நீராவி புகையிரத சேவை சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் ஆரம்பம்

Meiveli Media Team

வெளிநாட்டு சுற்றுலா பயனிகளுடன் இலங்கையின் புகழ்பெற்ற ஏiஉநசழல ளுpநஉயைட என்ற சொகுசு சுற்றுலா புகையிரதம் திருகோணமல புகையிரத நிலையத்தை வந்தடைந்துள்ளது. இது இலங்கையில் தற்போது இயங்கக்கூடிய நிலையில் உள்ள நீராவி இயந்திரம் ஆகும். சுமார் 75 ஆண்டுகளுக்கு மேலான பழமையான வரலாற்றைக் கொண்ட இந்த இயந்திரம், பிரித்தானியர் காலத்து புகையிரதப் பயணத்தை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 2026 பெப்ரவரி மாதம் முதல் இந்த புகையிரதம் மீண்டும் தனது சேவையைத் ஆரம்பித்துள்ளது. இது வழக்கமான பயண அட்டவணையில் இயங்குவதில்லை. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காகவும், விசேட நிகழ்வுகளுக்காகவும்   பிரத்தியேகமாக முன்பதிவு செய்யப்பட்டு இயக்கப்படுகிறது.

இந்த சொகுசு புகையிரதத்தில் 19ஆம் நூற்றாண்டு பாணியிலான உட்புற அலங்காரங்களுடன்,  நவீன காலத்து குளிரூட்டப்பட்ட பெட்டிகள் , உணவகப் பெட்டி  பார் , மற்றும் காட்சிகளை ரசிப்பதற்கான விசேட வசதிகள் கொண்ட இரண்டு குளிர்சாதன வசதி கொண்ட சொகுசு பெட்டிகள் உள்ளன. இவை பழங்கால பாணியில் அலங்கரிக்கப்பட்டவை. புகையிரதத்தின் உள்ளேயே உயர்தர உணவுகள் மற்றும் பானங்கள் வழங்கும் வசதி உள்ளது.

இது ஜே.எஃப். டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் நிறுவனத்தினால் இலங்கை புகையிரதத் திணைக்களத்துடன் இணைந்து இயக்கப்படுகிறது.இது கொழும்பிலிருந்து கண்டி, நுவரெலியா , எல்ல மற்றும் திருகோணமலை போன்ற நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு இயக்கப்படுகிறது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற இந்த புகையிரதம் திருகோணமலை புகையிரத நிலையத்தை வந்தடைந்த நிகழ்வு, இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.