க.பொ.த. (சாதாரண தர) பரீட்சை – 2025 (2026)

ச. ஞான‌ பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI


​கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர) பரீட்சை – 2025 (2026), இம்முறை பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நடத்துவதற்கு இலங்கை பரீட்சைத் திணைக்களம் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது.
​இம்முறை பரீட்சைக்காக 382,249 பாடசாலை பரீட்சார்த்திகளும், 69,214 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் என மொத்தம் 451,463 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். க.பொ.த. (சாதாரண தர) பரீட்சை – 2025 (2026) இற்காக 3,545 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், பரீட்சை நடவடிக்கைகளுக்காக 531 ஒருங்கிணைப்பு நிலையங்களும் 33 பிரதேச சேகரிப்பு நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன.
​இரத்மலானை, தங்காலை, மாத்தறை, சிலாபம், வத்தரெக்க சுநீத வித்தியாலயம், மகரகம அபெக்ஷா வைத்தியசாலை மற்றும் கைதடி நுபீல்ட் (Nuffield) விசேட பாடசாலை ஆகியன விசேட பரீட்சை நிலையங்களாக செயற்படும்.
​பரீட்சை நடைபெறும்போது தேவையான பாதுகாப்பினைப் பொலிஸாரும் முப்படையினரும் வழங்குவதுடன், ஏதேனும் அனர்த்த நிலைமைகள் ஏற்படும் பட்சத்தில் அவற்றை எதிர்கொள்வதற்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தொடர்ச்சியாகச் செயற்படும்.
​பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக பின்வரும் ஆவணங்களைப் பயன்படுத்தலாம்:
​தேசிய அடையாள அட்டை
​செல்லுபடியாகும் கடவுச்சீட்டு
​செல்லுபடியாகும் வாகன சாரதி அனுமதிப்பத்திரம்
​பரீட்சார்த்திகள் பரீட்சை நிலையத்திற்கு வரும்போது கைத்தொலைபேசிகள், ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் (Smart watches), இலத்திரனியல் சாதனங்கள், கணிப்பான்கள் (Calculators), அழிப்பான் திரவங்கள் (Eraser fluid) மற்றும் குறிப்புப் புத்தகங்கள் போன்றவற்றைக் கொண்டுவருவதைத் தவிர்த்துக் கொள்ளவும்.
​இப்பரீட்சைக்குத் தோற்றும் விசேட தேவையுடைய பரீட்சார்த்திகளுக்கு, முன்னதாக விண்ணப்பங்கள் கோரப்பட்டு, நேர்முகப் பரீட்சைகள் மற்றும் மருத்துவ அறிக்கைகளை ஆய்வு செய்ததன் பின்னர் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
​அனைத்துப் பரீட்சார்த்திகளும் தமக்கு வழங்கப்பட்டுள்ள கால அட்டவணைக்கு அமைய, பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாக உரிய பரீட்சை நிலையத்திற்கு வருகை தர வேண்டும். பரீட்சை விதிகளுக்கு அமைய, பரீட்சைப் பணியாளர்களினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றிச் செயற்படுதல் அவசியமாகும்.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">