தமிழக அரசு லெட்டர் எழுதினா மட்டும் போதுமா: மீனவர்கள் கைதுக்கு தளபதி விஜய் கடும் கண்டனம்
Meiveli Media Team

புதுச்சேரியைச் சேர்ந்த 25 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் தமிழக மற்றும் புதுச்சேரி மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தற்போது நேரடியாகக் களமிறங்கி மத்திய மற்றும் மாநில அரசுகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சிறைபிடிக்கப்பட்டுள்ள 25 மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் உடனடியாக மீட்க மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். அதே சமயம், தமிழக அரசை மிகக் கடுமையாகச் சாடியுள்ள விஜய், ‘மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதைத் தடுக்க தமிழக அரசு உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ‘ஒவ்வொரு முறையும் மீனவர்கள் கைது செய்யப்படும்போது கடிதம் எழுதுவதே போதும் என்று முதல்வர் எண்ணுகிறாரா?’ என அவர் எழுப்பியுள்ள கேள்வி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்கள் பாதுகாப்பு விவகாரத்தில் வெறும் கடிதப் போக்குவரத்தோடு நின்றுவிடாமல்இ நிரந்தரத் தீர்வு காண அரசு முன்வர வேண்டும் என விஜய் விடுத்துள்ள இந்த அறிக்கை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

