ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க 78வது தேசிய சுதந்திரதின உரை
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

நாட்டின் மனித வளத்தைப் பயன்படுத்தி, வேறுபாடுகளைப் புறந்தள்ளி, பொருளாதார ரீதியாக வலுவான புதிய இலங்கையை நாம் கட்டியெழுப்ப வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற இலங்கையின் 78வது தேசிய சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.


