ராஜபக்சக்கள் மீதான விசாரணை; புலம் பெயர் தமிழர்களுக்கு ‘கிக்கை கொடுத்திருக்கும் :எம்.பி. அர்ச்சுனா தெரிவிப்பு
Meiveli Media Team

ராஜபக்சக்களை இந்த அரசு விசாரணைக்கு அழைத்துள்ளமை புலிப் புலம் பெயர் தமிழர்களுக்கு மதுபானத்தை நுகர்ந்து பார்த்த ‘கிக்’கை கொடுத்திருக்கும் என சுயேட்சைக் குழுவின் யாழ் மாவட்ட எம்.பி. யான அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமைஇடம் பெற்ற தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் சட்டத்திருத்த ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தhர். பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்சஷ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார். அவரது தாய் சிராந்தி ராஜபக்சஷ நிதிக்குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டார்.இதனூடாக அரசாங்கம் மகிழ்ச்சியடைந்திருக்கும்.நாமல் மற்றும் அவரது தாயை அழைத்து விசாரித்ததால் எமது புலித் தமிழ் புலம்பெயர் அமைப்பினருக்கு சிற்றின்பம் ஒன்று கிடைத்திருக்கும். அது எவ்வாறாயின் மதுபான போத்தலை திறந்து அந்த வாசத்தை நுகர்ந்து பார்த்தால் கிடைக்கும் இன்பம் அதாவது ‘கிக்’போன்றதாக இருக்கும்.இதனால் மக்கள் அரசாங்கத்துக்கு வாக்கு வழங்கப் போவதில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் நிலைமை மாறும் அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்றார்.

