பாதாள உலகத் தொடர்பு குற்றச்சாட்டு: நாமல் ராஜபக்ஷவிடம் 4 மணிநேரம் வாக்குமூலம் பதிவு

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

 

குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று காலை வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, சுமார் நான்கு மணிநேர விரிவான வாக்குமூலம் அளித்ததன் பின்னர் அங்கிருந்து வெளியேறினார்.

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவராகக் கூறப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவருடன் தொடர்புகளைப் பேணியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து அவரிடம் இதன்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் தனது தரப்பு விளக்கங்களை அதிகாரிகளிடம் சமர்ப்பித்த பின்னர் அவர் வெளியே வந்தபோது, அங்கு கூடியிருந்த பெருமளவிலான ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் அவரைச் சூழ்ந்துகொண்டனர்.

இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கியதாகக் குறிப்பிட்டதுடன், உண்மை விரைவில் வெளிப்படும் என்றும் தெரிவித்தார்.