நாமல் ராஜபக்சவுக்கு இந்திய குடியரசு தின நிகழ்வில் வழங்கப்பட்ட பிரமாண்ட வரவேற்பு: ஆலோசனையில் அனுர அரசு
Meiveli Media Team

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க புதுடில்லிக்கு பயணம் மேற்கொண்டு ஒரு வருடத்தை கடந்துள்ள சூழலில் அந்தப் பயணத்தில் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளை ஆக்கப்பூர்வமாக நடைமுறைப்படுத்தும் தீர்மானங்கள் எதுவும் இன்னமும் இலங்கையில் எடுக்கப்படவில்லை. இருநாட்டுகளுக்கு இடையிலான கேபிள் குழாய் அமைப்பு, திகோணமலை எண்ணெய் குதங்கள் விவகாரத்தில் விரைவான தீர்மானங்கள் எடுக்கப்படமை உட்பட பல்வேறு வாக்குறுதிகள் குறித்த நகர்வுகள் ஆக்கப்பூர்வமானதாக இல்லை என்பதால் இந்தியா இலங்கைமீது சற்று அதிருப்தியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இணக்கப்பாட்டான சூழலை அரசாங்கத்துடன், விரும்புவதை வெளிப்படுத்தும் நோக்கிலேயே டித்வா புயல் ஏற்பட்ட தருணத்தில் பல்வேறு உதவிகளை இந்தியா இலங்கைக்கு வழங்கியது. எனினும், இலங்கையில் நகர்வுகள் குறித்து ஓரளவு அதிருத்தியில் மோடி அரசாங்கம் இருப்பதால்தான் ஒடிசாவில் நடைபெற்ற குடியரசு தினத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு பிரமாண்டமான வரவேற்பை புதுடில்லி அளித்துள்ளதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.நாமல் ராஜபக்சவுக்கான வரவேற்பை சமகால அரசாங்கம் ஓர் எச்சரிக்கை மணியாக எடுக்க வேண்டும் என்பதே நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட பிரமாண்ட வரவேற்பின் இராஜதந்திர செய்தியாகும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நாமல் ராஜபக்சவுக்கு ஒடிசாவில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்வில் வழங்கப்பட்ட பிரமாண்ட வரவேற்பு குறித்து அரசாங்கம் பல்வேறு ஆலோசனைகளை நடத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது.

