உலகத் திருமதி அழகிப் போட்டியில் இலங்கையின் சபீனா யூசுப் மூன்றாம் இடம் பிடித்து சாதனை!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

அமெரிக்காவில் நடைபெற்ற 41-வது உலகத் திருமதி அழகிப் போட்டியில் (Mrs. World), இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய சபீனா யூசுப் இறுதிச் சுற்றின் முதல் மூன்று இடங்களுக்குள் தெரிவாகி, மூன்றாம் இடத்தைப் பிடித்து நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
உலகின் 60-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்ற இப்போட்டியின் இறுதி நிகழ்வுகள் இலங்கை நேரப்படி இன்று காலை நிறைவடைந்தன.
இதில் தாய்லாந்து நாட்டுப் போட்டியாளர் முதலிடம் பிடித்து மகுடம் சூடியதுடன், போட்டியை நடத்திய நாடான அமெரிக்காவின் போட்டியாளர் இரண்டாம் இடத்தைக் கைப்பற்றினார்.

வெற்றி குறித்துப் பேசிய சபீனா யூசுப், இந்தப் பயணம் தனக்கு எளிதான ஒன்றாக இருக்கவில்லை என்றும், தன் மீது தான் கொண்ட நம்பிக்கையே தன்னை இந்த நிலைக்கு உயர்த்தியதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும், தனது நாடு மற்றும் இலங்கை மக்கள் வழங்கிய பேராதரவே இந்த உலகளாவிய பயணத்தில் தனக்குப் பக்கபலமாக இருந்ததாக அவர் தனது நன்றிகளைப் பகிர்ந்து கொண்டார்.

