ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படும் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்கிறது
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படும் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்கிறது
ஒருவரின் நிலை கவலைக்கிடம் – வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குமாறு வலியுறுத்தி, இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்கிறது.
இன்று அதிகாலை 6 மணி அளவில், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த மூவரில் ஒருவரின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையை எட்டியது. இதனையடுத்து, அவர் 1990 ‘சுவசெரிய’ ஆம்புலன்ஸ் சேவை மூலம் அவசரமாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நான்கு பேருடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில், தற்போது அந்த இடத்தில் இருவர் தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கத்திடமிருந்து முறையான தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ள போராட்டக்காரர்கள், ஆசிரியர் சேவைக்கான உள்வாங்கலை உடனடியாகச் செயல்படுத்துமாறு வலியுறுத்தி வருகின்றனர்.


