ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVEL

முன்னாள் ஜனாதிபதி விக்ரமசிங்கவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (28) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பாரியார் சகிதம் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தார்.
ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், உத்தியோகபூர்வ பயணம் என்ற போர்வையில் தனது பாரியாரான பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்குத் தனிப்பட்ட பயணம் மேற்கொண்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் 22ஆம் திகதி அவர் கைதுசெய்யப்பட்டு, கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

