உண்ணாவிரதத்தில் ஈடுபடுவோர் கவலைக்கிடம்

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVEL

இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினரால்,
அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவையில் உள்வாங்குவது அல்லது அவர்களது பதவி நிலைகளை முறைப்படுத்துவது தொடர்பான கோரிக்கைகள் முன்வைத்து மூன்றாவது நாளாகவும் நடாத்தப்படுகின்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், இன்றைய தினம் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மூன்று பேரின் உடல்நிலை மோசமாகிய படியால் மருத்துவர்களும் அன்புலன்ஸ் வாகனமும் கொண்டுவரப்பட்டு அவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் ஒருவருக்கு நிலைமை சற்று கவலைக்கிடமாக இருந்தமையால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்ட போதிலும் அவர் அதனை மறுத்து தொடர்ந்து தமக்கு நிரந்தர தீர்வு ஒன்று பெற்று தரும் வரை சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக இங்கு தெரிவித்தார்.