பம்பலப்பிட்டியவில் ‘Doctor Mobile’ இன் புதிய பிரீமியம் காட்சியறை திறப்பு: இலங்கையின் மொபைல் தொழில்நுட்பத் துறையில் புதிய மைல்கல்!

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இலங்கையின் கையடக்கத் தொலைபேசி மற்றும் தொழில்நுட்பச் சந்தையில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நம்பகமான சேவையை வழங்கி வரும் Doctor Mobile நிறுவனம், தனது விஸ்தரிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பம்பலப்பிட்டியவில் அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய Premier Showroom இனை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்துள்ளது. சர்வதேச தரம் வாய்ந்த மொபைல் போன்கள் மற்றும் அவற்றுக்கான உபகரணங்களை ஒரே கூரையின் கீழ் கொண்டு வரும் இந்த புதிய காட்சியறை, வாடிக்கையாளர்களுக்கு உண்மையான பிரீமியம் சேவை அனுபவத்தை வழங்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


தற்போது சர்வதேச அளவில் புகழ்பெற்ற CHUWI, Nothing, DOOGEE மற்றும் COOLPAD போன்ற வர்த்தக நாமங்களின் இலங்கையிலான தேசிய விநியோகஸ்தராக (National Distributor) Doctor Mobile செயற்படுகின்றது. இதன் மூலம் உலகத்தரம் வாய்ந்த நவீன தொழில்நுட்ப தயாரிப்புகளை நேரடி உத்தரவாதத்துடன் இலங்கையர்கள் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை மிகவும் இலகுவாகவும் வெளிப்படையாகவும் தெரிவு செய்வதற்கு ஏதுவாக நேரடி கொள்முதல் (Live Shopping) மற்றும் சிரமமற்ற ஆன்லைன் கொள்முதல் வசதிகளையும் நிறுவனம் வழங்கி வருகின்றது.


Doctor Mobile இன் தனித்துவமான சேவைகளில் ஒன்றான நேரடி பழுதுபார்ப்பு (Live Repairing) வசதி இப்புதிய காட்சியறையிலும் பிரதான இடத்தைப் பெற்றுள்ளது. திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப நிபுணர்களால், வாடிக்கையாளர்களின் கண் முன்னாலேயே மிக விரைவாகவும், தொழில்முறை ரீதியாகவும் பழுதுபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது வாடிக்கையாளர்களுக்கு தங்களது சாதனங்களின் மீதான நம்பிக்கையையும் பாதுகாப்பையும் அதிகரிக்கச் செய்கின்றது.


மேலும், நவீன கால பொருளாதாரத் தேவைகளைக் கருத்திற்கொண்டு, வாடிக்கையாளர்களின் கொள்வனவுகளை எளிதாக்கும் வகையில் பல்வேறு சலுகைகளை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. கடன் அட்டைகள் இல்லாமலேயே பொருட்களைக் கொள்வனவு செய்யக்கூடிய PAYZY, KOKO, MINTPAY மற்றும் SnapPay போன்ற தவணை கட்டண வசதிகள் இங்கு வழங்கப்படுகின்றன. இதன் மூலம் தரம் மற்றும் புதிய தொழில்நுட்பத்தை விரும்பும் எவரும் பாரிய நிதிச் சுமையின்றி தமக்குப் பிடித்தமான சாதனங்களைச் சொந்தமாக்கிக் கொள்ள முடியும். தொழில்நுட்பத்தை வெறும் விற்பனைப் பொருளாக மட்டும் பார்க்காமல், அதனுடன் இணைந்த நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதையே Doctor Mobile தனது இலக்காகக் கொண்டு செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.