பிரதமர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தனது வாக்கைப் பதிவு செய்தார்.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தனது வாக்கை மே 6 ஆம் திகதி காலை கோட்டே, மிரிஹானவில் உள்ள சமுர்த்தி கட்டிடத்தில் நடைபெற்ற வாக்களிப்பு நிலையத்தில் பதிவு செய்தார்.

இங்கு ஊடகவியலாளர்கள் முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளித்த பிரதமர்,

அண்மையில், முதல் முறையாக எமக்கு அரசாங்க ஆதரவுடன் உழைக்கும் மக்கள் தினத்தை கொண்டாட முடிந்தது. இந்த ஆண்டு மே தினக் கொண்டாட்டம் எமது வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான மே தினக் கொண்டாட்டமாகும். ஜனாதிபதித் தேர்தலை பார்க்கிலும் பொதுத் தேர்தலில் எங்களுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது, அதேபோன்று உள்ளூராட்சித் தேர்தலிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன்.

உள்ளூராட்சித் தேர்தல்களில் வெற்றி பெற்று, எங்களுக்கு கிராமங்களுக்கு அபிவிருத்தியை கொண்டு செல்ல முடியுமாக இருக்கும். உள்ளூராட்சி மன்றங்கள் பொதுமக்களுக்கு மிக நெருக்கமானவை. அதனால்தான் இந்தத் தேர்தல் எங்களுக்கு மிகவும் முக்கியமானது.

குற்றவாளிகள் அரசியல் பாதுகாப்பை இழந்துள்ளதால் அவர்கள் கலவரமடைந்துள்ளனர். அவர்களின் இந்த அமைதியின்மைதான் நாட்டில் நடைபெறும் குற்றங்களுக்குக் காரணம். “பொலிஸார் தற்போது சட்டம் ஒழுங்கைப் பேணி வருகின்றனர்” என்று பிரதமர் தெரிவித்தார்.